சங்கர மடத்தில் உள்ள மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெறுவதற்காக பாரதீய ஜனத்தா கட்சி ( பா.ஜ.க) மூத்த தலைவர் சுப்பிரமணியன், சுவாமி காஞ்சிபுரத்துக்கு இன்று வந்திருந்தார். விஜயேந்திரரை சந்தித்துப் பேசியதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுவிக்க வாய்ப்பு உண்டா?'
ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் வெளியே வரமுடியாது. பிரதமரைக் கொள்வது என்பது சாதாரண விஷயமா? வெளிநாட்டு பயங்கரவாதத்துடன் சேர்ந்து கொண்டு பிரதமரைக் கொலை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது. பி.ஜே.பி (பா.ஜ.க) ஆட்சியில் இருக்கும் வரை அவர்கள் விடுதலையாக முடியாது.
'பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'
பிரியங்கா காந்தி எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார் என்று சொன்னால் ஒரு பெரிய விழா நடத்தி அறிவிக்கட்டும்.